ADDED : டிச 13, 2024 05:02 AM
கம்பம்: கம்பம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரிக் சீரான வளர்ச்சிக்கு ஜிங் சல்பேட் இட வேண்டும் என்றும், மானிய விலையில் வாங்கி கொள்ள வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கம்பம் வேளாண் உதவி இயக்குநர் பூங்கோதை கூறியதாவது : கம்பம் வட்டாரத்தில் கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி , புதுப்பட்டி அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . சீரான பயிர் வளர்ச்சி அதிக மகசூல் பெற ஜிங் சல்பேட் இட வேண்டும். ஜிங் பற்றாக்குறையால் இலைகளின் அடிபாகத்தில் நடு நரம்பில் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிற கோடுகள் தோன்றும். சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும். வளர்ச்சி சீராக இருக்காது. மணி பிடித்தல் கால தாமதமாகும்.
இதை சரி செய்ய ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும். 50 சதவீத மானியத்தில் கம்பம், கூடலூர் விரிவாக்க மையங்களில் உள்ளது. விவசாயிகள் பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.