sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அன்னதான திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு: அமைச்சர் செந்தூர்பாண்டியன்

/

கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அன்னதான திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு: அமைச்சர் செந்தூர்பாண்டியன்

கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அன்னதான திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு: அமைச்சர் செந்தூர்பாண்டியன்

கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அன்னதான திட்டத்தில் சேர்க்க ஏற்பாடு: அமைச்சர் செந்தூர்பாண்டியன்


ADDED : ஜூலை 14, 2011 01:15 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடையநல்லூர் : கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தில் இணைத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஆஞ்சநேயர் கோயில் தென்மாவட்டத்தில் அதிகமான பக்தர்கள் வழிபட்டு செல்லக்கூடிய திருத்தலமாக அமைந்துள்ளது.

அனுமன் ஜெயந்தி, ராமநவமி, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட சிறப்புமிக்க விழாக்களும், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகளும் இக்கோயிலில் நடைபெற்று வருகிறது.தென்மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து ஆஞ்சநேயரை தரிசித்து செல்கின்றனர். இதனையடுத்து இக்கோயில் தமிழக முதல்வரின் அன்னதானம் திட்டத்தில் இணைத்திட வேண்டுமென பக்தர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.



இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரிடம் தொகுதி மக்கள் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் அமைச்சர் செந்தூர்பாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தார்.இதனையடுத்து இக்கோயில் அன்னதான திட்டத்திற்காக தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், ''நெல்லை மாவட்டத்தில் கோயில் அன்னதான திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பல்வேறு கோயில்களை சேர்த்திட பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 10 கோயில்கள் அன்னதான திட்டத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி கடையநல்லூர் தொகுதி கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயில், வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயில், புளியங்குடி சிந்தாமணி சொக்கலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட 10 கோயில்கள் அன்னதான திட்டத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.










      Dinamalar
      Follow us