sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பாரதியார் பல்கலை.,யில் நூலகவியல் பாடம் துவக்கம் : ஒரே நேரத்தில் 2 பட்டங்களை பெற வசதி

/

பாரதியார் பல்கலை.,யில் நூலகவியல் பாடம் துவக்கம் : ஒரே நேரத்தில் 2 பட்டங்களை பெற வசதி

பாரதியார் பல்கலை.,யில் நூலகவியல் பாடம் துவக்கம் : ஒரே நேரத்தில் 2 பட்டங்களை பெற வசதி

பாரதியார் பல்கலை.,யில் நூலகவியல் பாடம் துவக்கம் : ஒரே நேரத்தில் 2 பட்டங்களை பெற வசதி


ADDED : ஜூலை 14, 2011 01:21 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : பாரதியார் பல்கலை.,யில் நூலகவியல் சான்றிதழ், பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன.பாரதியார் பல்கலைக் கழக தொலை தூர கல்வியில் 2011-12ம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு சி.எல்.ஐ.எஸ், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பி.எல்.ஐ.எஸ் மற்றும் பி.எல்.ஐ.எஸ் முடித்தவர்களுக்கு எம்.எல்.ஐ.எஸ் ஆகிய நூலகவியல் சான்றிதழ், பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்புகள் துவக்கப்படுகிறது.கடந்த 2009-10ம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட எம்.எஸ்சி விலங்கியல், எம்.எஸ்சி தாவரவியல் ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கு அட்மிஷன் நடந்து வருகிறது.



மாணவர்கள் வசதிக்காக வகுப்புகள், செய்முறை வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் நெல்லையிலேயே நடத்தப்படகிறத.பெண்களுக்கு கல்வி கட்டணத்தில் 10 சதவீதம், பத்திரிக்கை, ரேடியோ, டிவி பணியாளர்கள், அனைத்து ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், போலீஸ் துறை பணியாளர்களுக்கு 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது.கல்லூரியில் பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்து கொண்டிருப்பவர்கள் இப்பல்கலையில் வேறு பாட பிரிவில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2 பட்டங்களை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.



முதலாம் ஆண்டு அல்லது 2ம் ஆண்டில் கல்லூரி படிப்பையோ அல்லது தொலை தூர கல்வியில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் பாரதியார் பல்கலை.,யில் சேர்ந்து அடுத்த ஆண்டிற்கான படிப்பை தொடரலாம்.எம்.எஸ்சி ஐ.டி, சாப்ட்வேர் இன்ஜி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ (சிஸ்டம்ஸ்) படித்தவர்கள் ஒரு ஆண்டில் எம்.சி.ஏ முடிக்கலாம். பிளஸ் 2 அல்லது பாலிடெக்னிக், டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக 5 ஆண்டு எம்.பி.ஏவில் சேரலாம்.டிப்ளமோ இன் ஐ.டி, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்தவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பி.சி.ஏ/பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்சில் சேரலாம். பட்டப் படிப்பு முடித்தவர்கள் 19 எம்.பி.ஏ சிறப்பு பாட பிரிவுகள், அனைத்து எம்.எஸ்சி, அனைத்து எம்.ஏ பாட பிரிவுகளிலும், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பாலிடெக்னிக், டிப்ளமோ முடித்தவர்கள் அனைத்து பி.எஸ்சி, பி.ஏ, பட்டப் படிப்புகளிலும் நேரடியாக சேரலாம். அட்மிஷன் மேலும் விபரங்களுக்கு நெல்லை ஜங்ஷனில் பஸ்ஸ்டான்ட் எதிர்புறம் உள்ள பாரதியார் பல்கலை., நெல்லை கல்வி மையத்தை (0462 - 2331555, 3204445, 97913 54267) அணுகலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us