sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது

/

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது


ADDED : ஜூலை 14, 2011 01:17 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 37 பவுன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் இரவில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து நகையை திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய நெல்லை சகர டிஐஜி(பொறுப்பு) வரதராஜூ, எஸ்பி., விஜயேந்திர பிதரி உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான குழு கொள்ளையனை தீவிரமாக தேடினர்.கடந்த 12ம் தேதி தனிப்படையினர் தாழையூத்து பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் படியாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.



பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், சுரண்டை, ஊத்துமலை, சங்கரன்கோவில் டவுன், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து திருடியதாகவும், இரவில் தூங்கி கொண்டிருந்த நபர்களிடம் நகைகளை பறித்து சென்றதையும் ஒப்புக் கொண்டார்.கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஊட்டி, கோத்தகிரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரவி(எ) முகம்மது ரபீக் என்பதும், தற்போது பாளை., கோட்டூரில் குடியிருந்து வருவதும் தெரிய வந்தது.இதனையடுத்து தனிப்படை போலீசார் ரவி(எ) முகம்மது ரபீக்கை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 37 பவுன் தங்க நகைகள், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.கொள்ளையனை கைது செய்த தனிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் தனிப்படை போலீசாரை எஸ்பி., விஜயேந்திர பிதரி பாராட்டினர்.










      Dinamalar
      Follow us