/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திரிகூடபுரம் பஞ்.,சில் புதிய குடிநீர் கிணறு அமைக்க கோரிக்கை
/
திரிகூடபுரம் பஞ்.,சில் புதிய குடிநீர் கிணறு அமைக்க கோரிக்கை
திரிகூடபுரம் பஞ்.,சில் புதிய குடிநீர் கிணறு அமைக்க கோரிக்கை
திரிகூடபுரம் பஞ்.,சில் புதிய குடிநீர் கிணறு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2011 12:17 AM
கடையநல்லூர் : 'திரிகூடபுரம் பஞ்.,சில் குடிநீர் ஆதாரத்தை பெருக்கிட 15 லட்ச ரூபாய் செலவில் புதிய கிணறு அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்' என அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் பஞ்., தலைவர் ஜோதி நாச்சியார் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் மனுவில் கூறியிருப்பதாவது:-கடையநல்லூர் பஞ்.,யூனியன் திரிகூடபுரம் பஞ்.,சில் குடிநீர் பொதுமக்களுக்கு சீராக கிடைத்திட ஊருக்கு மேற்கே உள்ள பாலாற்றில் மலையின் கீழ் உள்ள பகுதியில் குடிநீர் கிணறு தோண்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பைப் லைன் அமைத்திட வேண்டும்.
கிணற்றில் மோட்டார் பொருத்தி பைப் லைன் அமைத்திட திட்ட மதிப்பீடு 15 லட்ச ரூபாய் செலவாகும். இப்பகுதி மக்களின் நலன் கருதி இதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும்.
மேலும் இப்பகுதியில் உள்ள திரிகூடபுரம், முத்துசாமியாபுரம் ஆகிய பகுதிகளுக்கு 50 சோலார் விளக்கு அமைத்திடவும், திரிகூடபுரம், முத்துசாமியாபுரத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்திடவும், திரிகூடபுரம் பள்ளிவாசல் அருகில் சமுதாய நலக்கூடம் 10 லட்ச ரூபாய் செலவில் அமைத்திடவும், உச்சிமாகாளி அம்மன் கோயில் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் 7 லட்ச ரூபாய் செலவில் அமைத்திடவும், முத்துசாமியாபுரம் கண்ணன் தெருவில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் 4 லட்ச ரூபாய் செலவில் அமைத்திடவும், பாத்திமாநகர் சுகாதார வளாகம் அருகில் 7 லட்ச ரூபாய் செலவில் குடிநீர் வாட்டர் டேங்க் அமைத்திடவும், திரிகூடபுரம் உச்சிமாகாளி அம்மன் கோயில் அருகில் கலையரங்கம் மற்றும் பார்øவாளர்கள் அரங்கம் 10 லட்ச ரூபாய் செலவில் அமைத்திடவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.