sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி


ADDED : ஜூலை 14, 2011 01:10 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தென்காசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது.தென்காசி டிராபிக் போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது.

மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்போட்டிக்கு தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமை வகித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர் சாம் வேதமாணிக்கம், பள்ளி தலைமையாசிரியை உமாசித்ரா முன்னிலை வகித்தனர். போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.பேச்சு போட்டியில் உயர்நிலை பிரிவில் புனித மிக்கேல் பள்ளி மாணவி பெற்றோ ஜோவிதா முதலிடமும், ஹில்டன் பள்ளி மாணவி அஸ்வினி இரண்டாமிடமும், செங்கோட்டை ஏ.ஜி.பள்ளி மாணவி மெர்ஸி பிரியா மூன்றாமிடமும் பெற்றனர்.



மேல்நிலை பிரிவில் புனித மிக்கேல் பள்ளி மாணவி ரில்ஸானா பாத்திமா முதலிடமும், பாரத் பள்ளி மாணவி கோப்பெரும்தேவி இரண்டாமிடமும், மஞ்சம்மாள் அரசு பள்ளி மாணவி அனுசுயா மூன்றாமிடமும் பெற்றனர்.கட்டுரை போட்டியில் உயர்நிலை பிரிவில் ஹில்டன் பள்ளி மாணவி சுபலோகா முதலிடமும், மஞ்சம்மாள் அரசு பள்ளி மாணவி பாலாமணி இரண்டாமிடமும், மேல்நிலைப் பிரிவில் பாரத் பள்ளி மாணவி கனிமொழி முதலிடமும், மஞ்சம்மாள் அரசு பள்ளி மாணவி தீபாசில்ஷயா இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.










      Dinamalar
      Follow us