/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மருதம்புத்தூரில் மனுநீதி நாள் முகாம்
/
மருதம்புத்தூரில் மனுநீதி நாள் முகாம்
ADDED : ஜூலை 15, 2011 02:22 AM
முக்கூடல்:மருதம்புத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.பாப்பாக்குடி யூனியன் மருதம்புத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 962 மனுக்களில் 613 மனுக்கள் ஏற்கப்பட்டது. 350 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
முகாமில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். தென்காசி ஆர்.டி.ஓ., காங்கேயன் கென்னடி வரவேற்றார். நெல்லை எம்.பி., ராமசுப்பு பேசும்போது, ''குடிநீர் திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்களை பயன்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருதம்புத்தூரில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி வழங்கி இருக்கிறேன். முக்கூடல் பீடித் தொழிலாளர் ஆஸ்பத்திரியில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க மத்திய அரசு தொழிலாளர் நலத்துறையிடம் கேட்டுள்ளேன். நெல்லைக்கு பாபநாசத்தில் இருந்து குடிநீர் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசின் நிதியுதவியை பெற நடடிக்கை எடுப்பேன்'' என்றார்.விழாவில் 13 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 6 பேருக்கு முதியோர் பென்ஷன், 7 பேருக்கு இஸ்திரி பெட்டி, 3 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, விவசாயி ஒருவருக்கு கைத்தெளிப்பான், 2 பேருக்கு உயிர் உரங்கள், தோட்டக்கலை சார்பில் 4 பேருக்கு வாழை பயிர் நடவு உதவித் தொகை, ஆதிதிராவிடர் நலம் சார்பில் 2 பேருக்கு தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.அரசு துறை உயர் அதிகாரிகள் மனுக்களுக்கு பதில் கூறினர்.உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை புதுப்பட்டி ஆர்.ஐ., முருகன், வி.ஏ.ஓ., தங்கபாண்டியன், மருதம்புத்தூர் பஞ்., தலைவர் நல்லையா செய்திருந்தனர்.