/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வேன், கார் நேருக்கு நேர் மோதல் மூன்றடைப்பில் 16 பேர் படுகாயம்
/
வேன், கார் நேருக்கு நேர் மோதல் மூன்றடைப்பில் 16 பேர் படுகாயம்
வேன், கார் நேருக்கு நேர் மோதல் மூன்றடைப்பில் 16 பேர் படுகாயம்
வேன், கார் நேருக்கு நேர் மோதல் மூன்றடைப்பில் 16 பேர் படுகாயம்
ADDED : மே 28, 2024 10:03 PM
நான்குநேரி:ஆந்திர மாநிலம் வினுகொண்டாவைச் சேர்ந்த பொண்ணம்மா, 40, என்பவர் தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் ராமேஸ்வரத்தில் இருந்து சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி நோக்கி வந்தனர். வேனை முருகன், 38, என்பவர் ஓட்டி வந்தார்.
அதே நேரம் திருவனந்தபுரத்திலிருந்து மதுரையை நோக்கி ஒரு கார் சென்றது. காரை திருவனந்தபுரத்தை சேர்ந்த சாயிக் சர்தி பாட்ஷா மகன் முஸின், 21, என்பவர் ஓட்டி வந்தார். மூன்றடைப்பு அருகேயுள்ள தனியார் பால் கம்பெனி அருகே பைபாசில் ரயில்வே பாலம் வேலை நடைபெறுவதால் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்பாராத முஸின் காரை உடனே நிறுத்தியுள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் வேனும், காரும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின.
இதில், 8, முதல், 50, வயது வரையிலான, 16 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பித்தனர்.
மூன்றடைப்பு போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.