/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருப்பணிகரிசல்குளத்தில் ரூ.16.93 கோடியில்6 மெ.வாட் திறன் மின் உற்பத்தி நிலையம் ,மக்கள்எதிர்ப்பு
/
திருப்பணிகரிசல்குளத்தில் ரூ.16.93 கோடியில்6 மெ.வாட் திறன் மின் உற்பத்தி நிலையம் ,மக்கள்எதிர்ப்பு
திருப்பணிகரிசல்குளத்தில் ரூ.16.93 கோடியில்6 மெ.வாட் திறன் மின் உற்பத்தி நிலையம் ,மக்கள்எதிர்ப்பு
திருப்பணிகரிசல்குளத்தில் ரூ.16.93 கோடியில்6 மெ.வாட் திறன் மின் உற்பத்தி நிலையம் ,மக்கள்எதிர்ப்பு
ADDED : ஜூலை 15, 2011 02:26 AM
திருநெல்வேலி:திருப்பணிகரிசல்குளம் பகுதியில் 16.93 கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நெல்லை தாலுகா திருப்பணி கரிசல்குளம் துவாராசி கிராமத்தில் தனியார் பல்ப் மற்றும் பேப்பர் நிறுவனம் சார்பில் 6 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். சுற்றுசூழல் இன்ஜினியர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.இதில் தனியார் கம்பெனியின் சி.இ.ஓ ரகுபதி, நிலைய மேலாளர் சுப்பையா ஆகியோர் கூறியதாவது:
துவாராசி கிராமத்தில் 2.023 எக்டேர் நிலத்தில் 16.93 கோடியில் 6 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.
இதற்கு தினமும் 780 க.மீ தண்ணீர் தாமிபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. 264 டன் நிலக்கரி, பழுப் நிலக்கரி,மரத்தூள், விறகு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தினம் 21.12 டன் சாம்பல் பெறப்படுகிறது.இந்த ஆலையில் இருந்து மொத்தம் 239 க.மீ கழிவு நீரில் 50 க.மீ சாம்பல் மற்றும் தூசு நிலக்கரி தூசு மாசுகளை நீக்க பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மின் உற்பத்தி ஆலையில் பசுமை போர்வை திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பிரதிநிதிகள் பலர் பேசியதாவது:ஏற்கனவே இக்கிராமத்தில் ஒரு நிறுவனம் மோசடியாக பாங்கில் கடன் பெற்று மின்சாரம் தயாரிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி உள்ள. ஒரு பேப்பர் நிறுவனமும் தாமிபரணி ஆற்றில் உறைகிணறு தோண்டியுள்ளனர். இதுபோன்ற நிறுவனங்களால் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படும். பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும்.நிலத்தடி நீர், காற்று மாசுபாடு அடையும். ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் கழிவு நீரால் விவசாயம் முற்றிலும் அழிக்கப்படும். குடிநீர் ஆதாரங்கள் அழிவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். முதலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து விட்டு அதன் பின்னர் இதனை செயல்படுத்த மாட்டார்கள். எனவே, இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி வழங்காமல் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.இதில் ஏ.ஐ.சி.சி.டி.யு ராஜமாணிக்கம், திருப்பணி கரிசல்குளம் பஞ்., தலைவர் பொற்கொடி, துலுக்கர்குளம் பஞ்., தலைவர் கணேசன், திருப்பணிகசரில்குளம் பன்னீர்செல்வம் உட்பட பலர் பேசினர்.பொதுமக்களின் அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.