/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
3 மாணவர்கள் கால்வாயில் மூழ்கி பலி
/
3 மாணவர்கள் கால்வாயில் மூழ்கி பலி
ADDED : செப் 16, 2024 01:40 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயில் குளிக்கச்சென்ற பிளஸ் 2 மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் செயல்படும் சி.எஸ்.ஐ., ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் 7 பேர், திடியூர் அருகே வடுவூர்பட்டியில் நடந்த சக மாணவர் ஒருவரின் இல்ல புதுமனை விழாவில் நேற்று பங்கேற்றனர்.
பின், திடியூர் தனியார் இன்ஜி., கல்லுாரி பின்புறம் ஓடும் தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளித்தனர்.
நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற, 17 வயது மாணவர்கள் அருண்குமார், நிக்சல், 17, மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, சிறுவர்கள் மூவரின் உடல்களையும் மீட்டனர். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.

