/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவர்கள் மீது தாக்குதல் நெல்லையில் 6 பேர் கைது
/
மாணவர்கள் மீது தாக்குதல் நெல்லையில் 6 பேர் கைது
ADDED : ஆக 03, 2024 08:18 PM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பள்ளி மற்றும் கல்லூரியில் ஜாதி ரீதியாக நடந்த தாக்குதல் சம்பவங்களில் 9ம் வகுப்பு மாணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலிமாவட்டம் வட விஜயநாராயணத்தில் கடற்படையின் ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் தளம் உள்ளது. அதே வளாகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. அதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடையே பாட்டில் தண்ணீரை ஒருவர் மீது இன்னொருவர் சிந்தியதில் முன் விரோதம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் வீட்டில் இருந்து அரிவாளை கொண்டு வந்து சக மாணவரை வெட்டினார். இதுதொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த 14 வயது மாணவரை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
*திருநெல்வேலி தன்னாட்சிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் மாரி செல்வத்தை மாட்டுவண்டி பந்தய தகராறில் கல்லூரி முன்பாக வெட்டிய வல்லநாட்டை சேர்ந்த இலங்காமணி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.