/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஸ்பின்னிங் மில் எரிந்து நாசம் ரூ.9.53 கோடி இழப்பீடு
/
ஸ்பின்னிங் மில் எரிந்து நாசம் ரூ.9.53 கோடி இழப்பீடு
ஸ்பின்னிங் மில் எரிந்து நாசம் ரூ.9.53 கோடி இழப்பீடு
ஸ்பின்னிங் மில் எரிந்து நாசம் ரூ.9.53 கோடி இழப்பீடு
ADDED : ஆக 23, 2024 02:54 AM
திருநெல்வேலி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரராஜா. இவருக்கு, சங்கரன்கோவில் அருகே பருவக்குடியில் ஸ்பின்னிங் மில் உள்ளது. 2018 டிச., 19ல் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், கோடிக்கணக்கான ரூபாய் பஞ்சு சரக்குகள், தளவாட பொருட்கள் தீக்கிரையாயின.
அந்த பஞ்சு மில், பொதுத்துறையைச் சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், இழப்பீடு தரும்படி சுரேந்திரராஜா கோரினார்.
இன்சூரன்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சுரேந்திரராஜா வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர்.
அதில், மில்லுக்கு இழப்பீடு 9.50 கோடி, மன உளைச்சலுக்கு 3 லட்சம், வழக்கு செலவுக்கு 50,000 ரூபாய் வழங்க, ராஜபாளையம் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன கோட்ட மேலாளருக்கு உத்தரவிட்டனர்.

