/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.20 லஞ்சம் கொடுத்ததாக வழக்கு 13 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி விடுவிப்பு
/
ரூ.20 லஞ்சம் கொடுத்ததாக வழக்கு 13 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி விடுவிப்பு
ரூ.20 லஞ்சம் கொடுத்ததாக வழக்கு 13 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி விடுவிப்பு
ரூ.20 லஞ்சம் கொடுத்ததாக வழக்கு 13 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி விடுவிப்பு
ADDED : அக் 03, 2025 03:14 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளி ஒருவர் ஊழியருக்கு நீதிபதி முன்பாக ரூ.20 லஞ்சம் கொடுத்ததாக பதிவான வழக்கில் தொழிலாளி விடுவிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் 51. இவர் 2012 ஜூனில் ஒரு வழக்கில் நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற கிளார்க் ஆக இருந்த மாரியப்பனிடம் ரூ. 20 கொடுத்து ஒரு நகலை பெற்றார்.
இதனை நேரில் கவனித்த நீதிபதி சுந்தரராஜ், முருகன் லஞ்சமாக கொடுத்த இரு பத்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாரிடம் புகார் அளித்தார்.
முருகன், மாரியப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு 2019ல் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றப்பட்டது. விசாரணை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது 2023ல் மாரியப்பன் மரணம் அடைந்தார்.
முருகன் வழக்கில் இருந்து விடுவிக்கும்படி மனு நீதிமன்றத்தில் செய்தார். நீதிபதி ஆர்.சுப்பையா, “குற்றப்பத்திரிகையில், குற்றவாளி குற்ற நோக்கத்துடன் ரூ.20 வழங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை.
அவர் சட்டப்படி நகல் பெறுவதற்கான கட்டணமாக ரூ. 20 ஐ கொடுத்திருக்கலாம். எனவே முருகன் மீது குற்றம் நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. முருகனை விடுவித்து உத்தரவிடப்படுகிறது,'' என தீர்ப்பளித்தார்.