/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் ஆஜர்
/
பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் ஆஜர்
ADDED : மே 30, 2024 02:16 AM
திருநெல்வேலி:அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் நேற்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி., யாக கடந்தாண்டு பணியாற்றியவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வந்த 14 பேரின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் உட்பட போலீஸ் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வழக்கு திருநெல்வேலி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணையின் போது பல்வீர்சிங் உட்பட பத்து பேர் ஆஜராகினர். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. விசாரணை ஜூலை 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.