நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,: திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று முன்தினம் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது நீரில் இறங்கிய மூவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. இதில் இருவர் மீட்கப்பட்டனர். அப்துல் ரகுமான் 26, என்பவர் நீரில் மூழ்கி பலியானார். இரண்டு நாள் தொடர் முயற்சிக்கு பிறகு தீயணைப்பு படையினர் நேற்று அவரது உடலை மீட்டனர்.

