sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நெல்லை மோசடி கும்பல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

/

நெல்லை மோசடி கும்பல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நெல்லை மோசடி கும்பல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நெல்லை மோசடி கும்பல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு


ADDED : மே 03, 2024 10:16 PM

Google News

ADDED : மே 03, 2024 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:நெல்லையில் சமூக வலைத்தளத்தில் பழகி பணம் பறித்த பெண், அவரது கூட்டாளிகள், சென்னை பேராசிரியரிடம், 3 லட்சம் ரூபாய், 3 சவரன் நகையைப் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அக்கும்பல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 47. தொழிலதிபர். இவரிடம், மூன்று மாதங்களாக பாளை., பெருமாள்புரம், என்.ஜி.ஓ., சி காலனியைச் சேர்ந்த பானுமதி, 40, என்பவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார். பானுமதி அழைப்பை ஏற்று நித்யானந்தம் நெல்லைக்கு வந்தார்.

அவர் பானுமதி வீட்டில் இருக்கும்போது பானுமதி, அவரது கூட்டாளிகள் வெள்ளத்துரை, 42, சுடலை,40, ரஞ்சித், 42, பார்த்தசாரதி, 46, ஆகியோர் நித்யானந்தத்தை மிரட்டி, கடத்தி, 35சவரன் நகைகள், 11.35லட்சம் ரூபாயை பறித்தனர்.

நெல்லை மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, 30 நிமிடங்களில் நித்யானந்தத்தை மீட்டனர். பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் பானுமதியும், அவரது தரப்பினரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் சமூக வலைத்தளத்தில் பழகி நெல்லைக்கு வரவழைத்து லட்சக்கணக்கில் பணம், பொருட்களைப் பறித்தது தெரியவந்தது.

இத்தொகை மூலம் அவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்தினர். பிறருக்கு வட்டிக்கு பணம் கடன் கொடுத்து சம்பாதித்து வந்தனர். இக்கும்பல் பிடிபட்டதும் பானுமதியின் சமூகவலைத்தளக் கணக்குகளை போலீசார் தற்காலிகமாக முடக்கினர்.

கமிஷனர் உத்தரவு

இக்கும்பலால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, கிழக்கு துணை கமிஷனர் ஆதர்ஷ்பசேரா போலீசாருக்கு அறிவுறுத்தினர். பானுமதி தரப்பால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இந்த விவகாரத்தில் தாங்கள் சிக்கி பணம், பொருட்களை இழந்தது வெளியே தெரியவந்தால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை போய் விடும் எனக்கருதி பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளிக்கத் தயங்குகின்றனர்.

சென்னை பேராசிரியர்

போலீசாரின் விசாரணையில், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் பரமசிவம், ௭௫, என்பவரிடமும், பானுமதி தரப்பினர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவரை அணுகி போலீசார் விசாரித்தனர். அதற்குப்பின், அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.

தனக்கும், பானுமதிக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டதாகவும், பானுமதி அழைப்பின்படி தான் நெல்லைக்கு வந்ததாகவும், மார்ச் ௨௧ம் தேதி, தன்னை மிரட்டி, ௩ லட்சம், ௩ சவரன் செயின், ஏ.டி.எம்., கார்டு, காசோலைகளை பானுமதி தரப்பினர் பறித்ததாகவும் பரமசிவம் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் ஒரு வழக்கு

போலீசார் விசாரணை நடத்தி பானுமதி, வெள்ளத்துரை, சுடலை, பார்த்தசாரதி, ரஞ்சித் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் இவர்கள் கைது செய்யப்படுவர். அவர்களை கோர்ட் அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்து வழக்கில் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

பானுமதி தரப்பால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் சிலருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us