/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு மீண்டும் தலைதுாக்கும் ஜாதி மோதல்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு மீண்டும் தலைதுாக்கும் ஜாதி மோதல்
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு மீண்டும் தலைதுாக்கும் ஜாதி மோதல்
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு மீண்டும் தலைதுாக்கும் ஜாதி மோதல்
ADDED : ஆக 03, 2024 12:41 AM
திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணத்தில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் தள வளாகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இதில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஒரு மாணவர் மீது, மற்றொரு மாணவர் மதிய உணவின் போது பாட்டிலில் இருந்த தண்ணீரை சிந்தியதாக பிரச்னை எழுந்தது.
இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மறுநாள் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவரை, நாங்குநேரியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த சிறிய அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். விஜயநாராயணம் போலீசார் விசாரித்தனர்.
திருநெல்வேலி, பாளை., பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தன்னாட்சிக் கல்லுாரி ஒன்றில் தி.மு.க., பிரமுகர் வல்லநாடு முத்து மகன் மாரிச்செல்வம், 19, இரண்டாம் ஆண்டு படிக்கிறார். வல்லநாடு கோவில் கொடை விழாவில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் மாரிச்செல்வம் பங்கேற்றபோது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த முன்விரோதத்தில் நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து மாரிச்செல்வம் வெளியே வந்த போது, நான்கு பேர் அவரை அரிவாளால் வெட்டி தப்பினர். கையில் காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வல்லநாடு பகுதியைச் சேர்ந்த நால்வரை பாளை., போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் ஜாதி மோதல் சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த வாரம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி கழிப்பறையில் ஒரு சமுதாயம் குறித்து இன்னொரு சமுதாய மாணவர் அவதுாறாக எழுதியதில் பிரச்னை ஏற்பட்டது.
இதில், மோதலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள், 16 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கண்டித்தனர். போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இத்தகைய மோதல் போக்கு தொடரவே வாய்ப்புள்ளது.