/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கன்டெய்னர் லாரியில் தீ பர்னிச்சர் பொருட்கள் சேதம்
/
கன்டெய்னர் லாரியில் தீ பர்னிச்சர் பொருட்கள் சேதம்
ADDED : மே 03, 2024 02:21 AM

திருநெல்வேலி:பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பர்னிச்சர் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி தீப்பற்றியதால் பொருட்கள் தீக்கிரையாயின.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள பர்னிச்சர் ஷோரூமிற்கு சோபா, மெத்தை ,கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர்களை ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றிச் சென்றனர். லாரியை வினோத் 40, ஓட்டினார். நேற்று மதியம் 2:30 மணியளவில் திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் நாங்குநேரி 'டோல்கேட்' அருகே தாழைகுளம் பகுதியில் ரோட்டோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கேபினில் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்துள்ளார். கீழே இறங்கி கடைக்கு சென்று விட்டு திரும்ப வந்தபோது சிலிண்டர் காஸ் கசிந்து கேபினுக்குள் தீ பற்றியது.
சிலிண்டர், ஸ்டவ் ஆகியவற்றை லாரியில் இருந்து கீழே தள்ளினார். அதற்குள் தீ பரவி பின்புறம் உள்ள கண்டெய்னருக்குள்ளும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் பர்னிச்சர் பொருட்கள் தீக்கிரையாயின.