/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடங்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
/
கூடங்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
ADDED : ஆக 25, 2024 02:33 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே லட்சக்கணக்கான கிளாத்தி மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேற்கே பஞ்சல், பெருமணல் ஆகிய கடலோர கிராமங்களில் கிளாத்தி மீன்கள் லட்சக்கணக்கில் இறந்து ஒதுங்கின. இதனால் கடற்கரை முழுவதும் துர்நாற்றம் வீசியது. மீன்வளத்துறை அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்கள் பிடித்த கிளாத்தி மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் அவற்றை மீண்டும் கடலில் கொட்டியது தெரியவந்தது. அந்த மீன்கள் நீரோட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடங்குளம் கடற்கரை பகுதியில் ஒதுங்கின. அப்பகுதியில் கோழிப்பண்ணைகள் நடத்துபவர்கள் கோழி தீவனத்திற்காக இறந்த மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே மீன்கள் இறந்து ஒதுங்கியதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் மீனவர்கள் பிடித்து மீண்டும் கொட்டியது என தெரிந்து அவர்கள் நிம்மதியுற்றனர்.

