/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கபடி விழாவுக்கு சபாநாயகரை அழைத்ததால் ஆத்திரம் தி.மு.க., எம்.பி.,மகன் அவதுாறு ஆடியோ வைரல்

ADDED : மே 04, 2024 02:01 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி தி.மு.க., எம்.பி. ஞானதிரவியம் மகன் சேவியர் செல்வராஜா. வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக உள்ளார். இவர்களது சொந்த ஊர் வள்ளியூர் அருகே ஆவரைகுளம்.
அங்கு நடக்கும் கபடி விழாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்தவரும் சபாநாயகருமான அப்பாவுவை தலைமை வகிக்க விழா குழுவினர் அழைத்திருந்தனர்.
தமது சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வில் அப்பாவு தலைமை வகிப்பதா என ஆத்திரமுற்ற எம்.பி . மகன் சேவியர் செல்வராஜா, அந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த ஒரு நபரை அலைபேசியில் அழைத்து அவதூறாக பேசினார். இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது.
எம்.பி. ஞான திரவியமும் அப்பாவுவும் நண்பர்கள்தான் . எனினும் அவர்களுக்கிடையே நிலவும் தி.மு.க.,உட்கட்சி பூசலால் ஞானதிரவியம் மகன் இவ்வாறு பேசியுள்ளார் என தெரிகிறது.