/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
/
காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
ADDED : மே 12, 2024 12:48 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார், 58, கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் கரைசுத்துபுதுாரில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
அவர் உடலை சுற்றி இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்டு இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரித்தனர்.
ஜெயகுமார் கடிதங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை முடிந்துவிட்டது. அவரது தனிப்பட்ட பிரச்னைகளால் கூலிப்படையினர் இதில் ஈடுபட்டு இருக்கலாமா எனவும் பல்வேறு தனிப்படையினர் விசாரித்தனர்.
வீட்டுத் தோட்டத்து கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதில் கிடைத்த கத்தி, சோப்பு டப்பா போன்றவை குறித்தும் ஆய்வு நடக்கிறது.
சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள் கரைசுத்துபுதுார் தோட்டம், வீடு சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருக்கு நெருக்கமானவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளாரா எனவும், அதை நிரூபிப்பதற்கான தடயங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.