/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பஸ்
/
சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பஸ்
ADDED : மே 16, 2024 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முழுதும்திடீர் மழை பெய்தது. வண்ணார்பேட்டை ஜங்ஷன் பகுதிகளில் வாகனங்கள் மிதந்து செல்லும் அளவு தண்ணீர் தேங்கியது.
வள்ளியூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. வள்ளியூரில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. நேற்று பெய்த மழையில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது.
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்துார் சென்ற அரசு பஸ், பாலத்தின் நடுவில் சென்றபோது சிக்கியது. இடுப்பளவு தண்ணீரில் சிக்கிய பயணியர் 60க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.