/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மேள, தாளத்துடன் வாக்காளருக்கு அழைப்பிதழ்
/
மேள, தாளத்துடன் வாக்காளருக்கு அழைப்பிதழ்
ADDED : மார் 23, 2024 01:50 AM
அம்பாசமுத்திரம்:தமிழகத்தில், ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையம், 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி நெல்லை தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் மூத்த வாக்காளர்களை நேரிடையாக சந்தித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சப் - கலெக்டரும், அம்பாசமுத்திரம் உதவி தேர்தல் அலுவலருமான அர்பித் ஜெயின், நேற்று காலை, மேள, தாளங்களுடன் கல்லிடைக்குறிச்சியில் உள்ள, 102 வயதான மூத்த வாக்காளர் கிருஷ்ணய்யர் வீட்டிற்கு சென்றார்.
அவருக்கு பொன்னாடை அணிவித்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தொப்பி மற்றும் தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி, குடும்பத்துடன் ஓட்டளிக்க வேண்டுகோள் விடுத்தார். கிருஷ்ணய்யர் ஓட்டளிப்பதாக உறுதி அளித்தார்.

