/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: சசிகலா குற்றச்சாட்டு
/
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: சசிகலா குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: சசிகலா குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: சசிகலா குற்றச்சாட்டு
ADDED : ஆக 14, 2024 01:20 AM
திருநெல்வேலி,:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக திருநெல்வேலியில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை துவக்கிய சசிகலா குற்றம் சாட்டினார்.
'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பயணத்தை முன்னாள் முதல்வர் ஜெ., தோழி சசிகலா, தென்காசியில் ஜுலை 17 துவங்கி 20 வரை மேற்கொண்டார்.
இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை நேற்று மாலை திருநெல்வேலியில் துவக்கினார்.
இங்கு ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் வேனில் இருந்தபடி சசிகலா பேசுகையில் '' தி.மு.க., ஆட்சியில் எல்லா இடங்களிலும் ஊழல் மயமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கும் மோசமாகிவிட்டது. தி.மு.க., அரசு இதையெல்லாம் திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வளவு நாட்கள் சும்மா இருந்து விட்டீர்கள். ஆட்சியை நன்றாக கொண்டு செல்ல வேண்டும்.
மக்களுக்கு அரசு உதவ வேண்டும். அவர்களுக்கு உதவாமல் அவரிடமிருந்து பணம் பறிக்கும் வேலையை தி.மு.க., அரசு செய்கிறது ''என குற்றம் சாட்டினார்.ஆக.,18 வரையிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.