/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சேரன்மகாதேவி அருகே மூதாட்டி கொலை
/
சேரன்மகாதேவி அருகே மூதாட்டி கொலை
ADDED : ஜூலை 12, 2024 02:34 AM
திருநெல்வேலி:சேரன்மகாதேவியை அடுத்த அடுத்த புலவன் குடியிருப்பில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.
சேரன்மகாதேவியை அடுத்த புலவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மனைவி பொன்னம்மாள் (78). இவர் இன்று மாலை 4 மணி அளவில் ஊருக்கு மேல் புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று உள்ளார். இரவு நேரமாகியும் பொன்னம்மாள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறம் பொன்னம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்