/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அனுமதியின்றி சர்ச் கட்ட எதிர்ப்பு; கோவிலில் மக்கள் போராட்டம்
/
அனுமதியின்றி சர்ச் கட்ட எதிர்ப்பு; கோவிலில் மக்கள் போராட்டம்
அனுமதியின்றி சர்ச் கட்ட எதிர்ப்பு; கோவிலில் மக்கள் போராட்டம்
அனுமதியின்றி சர்ச் கட்ட எதிர்ப்பு; கோவிலில் மக்கள் போராட்டம்
ADDED : ஆக 12, 2024 10:55 PM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே தெற்கு ஏறாந்தையில், 130 ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. ஒரு குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளனர். அவர்கள் குடும்பத்திற்காக, புதிய சர்ச் கட்டி வருகின்றனர்.
இதற்கு பெரும்பான்மையான ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'அந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு மேற்கொள்ளலாம். அனுமதியின்றி பொது நிலத்தையும் ஆக்கிரமித்து சர்ச் கட்டுகின்றனர். இதனால், மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது' என, அப்பகுதி ஹிந்துக்கள் கூறுகின்றனர்.
அனுமதியின்றி சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் வளாகத்தில், அப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி இருந்தனர்.
ஊர் பிரமுகர் தனசிங் கூறியதாவது:
அந்த குடும்பத்தினர் மாற்று மதத்திற்கு மாறிய பின், ஹிந்து கோவில் விழா நடப்பதற்கு இடையூறு செய்கின்றனர்.
தற்போது சர்ச் கட்டி வருகின்றனர். சர்ச் கட்ட வருவாய் துறை, போலீஸ் அனுமதி இல்லை. கட்டக்கூடாது என, அதிகாரிகள் கூறி சென்ற பிறகும் பணி தொடர்கிறது.
எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இனி இங்கிருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம்; போராட்டத்தை தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

