/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்
/
நெல்லை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்
நெல்லை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்
நெல்லை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்
ADDED : ஆக 07, 2024 12:40 AM
திருநெல்வேலி,:நெல்லை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
நெல்லை அருகே கங்கைகொண்டான், துறையூர், தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் பானுமதி(49). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக இருந்தார்.
இவருக்கு ஒரு மகன் உள்ளார். பானுமதி
கடந்த 3ம் தேதி காலை பணிக்கு செல்வதற்கு துறையூர் பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது இவர் மீது ஒரு கார் மோதியது. படுகாயமடைந்த பானுமதி ௪ம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 5ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டறிந்தனர். பானுமதியின் உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். பின்னர் உறுப்புகளை அகற்றும் நடவடிக்கையில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர்.
பானுமதியின் கல்லீரல் அகற்றப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு, மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு, கண் கருவிழிகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
அவை தகுதியுள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்படவுள்ளது. இவற்றின் மூலம் 5 பேர் பயன் அடைவர் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
உறுப்புகள் தானம் பெறப்பட்டதால் பானுமதியின் உடலுக்கு ஆஸ்பத்திரி டீன் ரேவதிபாலன், டாக்டர்கள், பணியாளர்கள், மாணவர்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துறையூரில் பானுமதியின் உடலுக்கு நெல்லை ஆர்.டி.ஓ., கண்ணா கருப்பையா, தாசில்தார் ஜெயலட்சுமி மரியாதை செலுத்தினர்.