
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பாத்திமா அன்னை கத்தோலிக்க சர்ச் உள்ளது. இதன் பங்கு தந்தையாக ஜான்சன் உள்ளார். உதவி பங்கு தந்தையாக ஆரோக்கியதாஸ், 35, என்பவர் பணிபுரிந்தார். இவரது சொந்த ஊர் அரக்கோணம்.
கத்தோலிக்க பாதிரியார் பயிற்சிக்குப் பின் ஓராண்டு, உதவி பங்கு தந்தையாக சர்ச்சில் பணியாற்ற வேண்டும். அதன்படி வள்ளியூரில் ஓராண்டாக பணியாற்றி நேற்றுடன் பயிற்சியை நிறைவு செய்தார். அவர் வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட இருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணிக்கு சர்ச்சுக்கு அருகில் உள்ள அவரது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வள்ளியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

