ADDED : நவ 17, 2026 08:57 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: நாங்குநேரி அருகே கிடைக்குள் அடைக்கப்பட்டிருந்த 15 ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள் ஒரே இரவில் உயிரிழந்தன. பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேல அரியகுளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை நேற்று (நவ.,16) இரவு கிடைக்குள் அடைத்துள்ளார். இன்று (நவ.,17) காலை பார்த்தபோது 15 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. அப்போது கிடைக்குள் இருந்து சுமார் 6 அடி நீளமுள்ள பழுப்பு நிறப் பாம்பு வெளியேறியுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
