sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு

/

18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு

18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு

18ம் தேதி முதல் பள்ளி புறக்கணிப்பு: சண்முகபுரம் மாணவர்கள் அறிவிப்பு


ADDED : ஜூலை 14, 2011 01:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திசையன்விளை : சண்முகபுரம் தொடக்க, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வரும் 18ம் தேதி முதல் பள்ளியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-திசையன்விளை டவுன் பஞ்.,சிற்குட்பட்ட சண்முகபுரத்தில் பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி நடந்து வந்தது.

2009-10 கல்வியாண்டில் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு எஸ்.எஸ்.ஏ.திட்டத்தில் புதிய கட்டடம் கட்ட ரூ.9.75 நிதி ஒதுக்கப்பட்டது. 2010-11ம் கல்வி ஆண்டில் இப்பள்ளி ஆர்.எம்.எஸ்.ஏ.திட்டத்தில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு கட்டடம் கட்டவும், தளவாட சாமான்கள் வாங்கவும் அரசு 58 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.



இப்பள்ளி நடைபெற்று வரும் இடத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட போதிய இடவசதி இல்லாததால் திசையன்விளை டவுன் பஞ்.,சிற்கு சொந்தமான இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்ட 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கி திசையன்விளை டவுன் பஞ்.சில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டு கடந்த பிப்.28ம் தேதி அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. ஆனால் இந்த இடத்தில் இதுவரை புதிய கட்டடம் கட்ட ஆரம்பிக்காததால் மாணவ, மாணவிகள் படிக்க போதிய இடவசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக கட்டட பணி தொடங்காததை கண்டித்து வரும் 18ம் தேதி முதல் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதை புறக்கணித்துவிட்டு ஊர் பொதுமக்களின் ஆலோசனைபடி அனைவரும் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சண்முகபுரம் ஊர் பொதுமக்கள் மனுவில் கூறியுள்ளனர்.










      Dinamalar
      Follow us