/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆற்றில் மூழ்கி 2 சிறுமியர் பலி
/
ஆற்றில் மூழ்கி 2 சிறுமியர் பலி
ADDED : ஜன 18, 2025 12:25 AM

திருநெல்வேலி:துாத்துக்குடி, மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் நாகார்ஜுனன். துாத்துக்குடி, மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் அய்யப்பன். இருவரது குடும்பத்தினரும் பொங்கல் விடுமுறையில் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வேளார்குளத்தில் நண்பர் வீட்டுக்கு வந்தனர். நேற்று பகலில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில், 15 பேர் குளித்தனர்.
அப்போது, சிறுமியர் ஆறு பேர் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் நான்கு பேரை மீட்டனர். இதில், நாகார்ஜுனன் மகள் வைஷ்ணவி, 13, அய்யப்பன் மகள் மாரி அனுஷ்யா, 16, ஆகியோர் நீரில் மூழ்கினர். சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினர் தேடி வைஷ்ணவி உடலை மீட்டனர். மாரி அனுஷ்யாவை தேடி வருகின்றனர்.