sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது

/

 அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது

 அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது

 அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது


ADDED : பிப் 14, 2026 04:34 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில், சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித்குமார், 27, என்பவரிடம், சிவகங்கையை சேர்ந்த ராஜலெட்சுமி, 43, புதுக்கோட்டையை சேர்ந்த சரோஜினி, 28, ஆகியோர், சரோஜினி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறி, நம்பிக்கை ஏற்படுத்தினர்.

அதன்படி, திருநெல்வேலி சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, அஜித்குமாரிடம், 8 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணையை வழங்கினர். அஜித்குமார் வேலையில் சேர முயன்றபோது, அந்த நியமன ஆணை போலியானது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, அஜித்குமார் புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சரோஜினி, ராஜலெட்சுமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us