sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ஆட்டோ மீது கல்லுாரி பஸ் மோதியதில் மாணவர்கள் உட்பட 4 பேர் காயம்

/

 ஆட்டோ மீது கல்லுாரி பஸ் மோதியதில் மாணவர்கள் உட்பட 4 பேர் காயம்

 ஆட்டோ மீது கல்லுாரி பஸ் மோதியதில் மாணவர்கள் உட்பட 4 பேர் காயம்

 ஆட்டோ மீது கல்லுாரி பஸ் மோதியதில் மாணவர்கள் உட்பட 4 பேர் காயம்


ADDED : பிப் 21, 2026 05:18 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தனியார் பொறியியல் கல்லூரி பஸ், பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

திருநெல்வேலி சுத்தமல்லியைச் சேர்ந்த இசக்கியப்பன் 30, தச்சநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக உள்ளார். நேற்று காலை கோபாலசமுத்திரத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லுாரிக்கு சென்றார்.

திருநெல்வேலி- கடையம் ரோட்டில் சுத்தமல்லி அருகே விஸ்வநாதன் நகரில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிய ஆட்டோ மீது மோதியது. இதில், சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் நடுக்கல்லூரைச் சேர்ந்த மனக்காவலம் பெருமாள் 49, பத்தாம் வகுப்பு மாணவிகள் யஸ்வனி 15, செல்வபாலா 15, முத்துஅருள் 15, ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவி செல்வபாலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

மது போதையில் பஸ் டிரைவர் கல்லுாரி பஸ் டிரைவர் இசக்கியப்பன், மது போதையில் என்ன நடந்தது என அறியாத நிலையில் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். சுத்தமல்லி போலீசார் அவரை கீழே இறக்கினர். அவர் நிற்க முடியாத அளவுக்கு மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து அப்பகுதி மக்கள் டிரைவரை சூழ்ந்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் அவரை பாதுகாப்பாக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின் இசக்கியப்பனை கைது செய்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களிடம் கலெக்டர் சுகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன், மருத்துவமனை டீன் ரேவதி பாலன் நலம் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us