ADDED : ஆக 22, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலியில் பட்டியலின வாலிபர் தீபக்ராஜன் கொலை வழக்கில் கைதான நவீன் 23, மீது ஏற்கனவே ஆற்காடு சுரேஷ் கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் காசி ராமன் 25, மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை நாங்குநேரி போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோல நாங்குநேரி ரமேஷ் (எ)ராமகிருஷ்ணன் 27 மற்றும் சூர்யா 18, ஆகியோரை களக்காடு போலீசார் ஆயுத வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.