/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநங்கைகள் மீது போலீசார் தடியடி 5 பேர் காயம்
/
திருநங்கைகள் மீது போலீசார் தடியடி 5 பேர் காயம்
ADDED : செப் 26, 2024 03:15 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இரவில் ரோட்டோரமாக நிற்கும் திருநங்கைகள் டூவீலரில் வருபவர்களை வழிமறித்து பாலியல் தொழிலுக்கு அழைப்பதும் பணம் பறிப்பதுமாக உள்ளனர் என புகார்கள் எழுந்தன.
பணகுடி போலீசார் நேற்று முன்தினம் இரவு இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக வந்த திருநங்கைகள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். போலீசார் திருநங்கைகளை மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
இதில் 5 திருநங்கைகள் காயமுற்றனர். காயமுற்ற திருநங்கைகள் தங்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

