/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஊராட்சி தலைவியை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேருக்கு தண்டனை
/
ஊராட்சி தலைவியை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேருக்கு தண்டனை
ஊராட்சி தலைவியை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேருக்கு தண்டனை
ஊராட்சி தலைவியை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேருக்கு தண்டனை
ADDED : அக் 09, 2024 02:08 AM
திருநெல்வேலி:ஊராட்சி தலைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேருக்கு திருநெல்வேலி கோர்ட் தண்டனையை உறுதி செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்து ஊராட்சி தலைவியாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி 2006 முதல் 2011 வரை இருந்தார்.
ஊராட்சியில் பெண்களுக்கான கழிப்பறை கட்ட அவர் முயன்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் சுப்பிரமணியன் தரப்பினர் அவரை 2011 ஜூன் 13 இரவு ஆட்டோவில் சென்றபோது சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் காது மற்றும் விரல்கள் துண்டிக்கப்பட்டு கழுத்திலும் பலத்த வெட்டு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இதில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்கு திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சந்தனமாரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது நடராஜன் என்பவர் இறந்தார்.
கவுன்சிலர் சுப்பிரமணியன், சுல்தான், கார்த்திக், ஜேக்கப், பிரவீன்ராஜ், விஜயராமமூர்த்தி ஆகிய ஆறு பேரை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி சுரேஷ்குமார் தண்டனை விபரங்களை நாளை (அக்.,10) அறிவிப்பதாக தெரிவித்தார். ஆறு பேரும் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

