/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவிக்கு பாலியல் தொல்லை 58 வயது ஆசிரியர் தலைமறைவு
/
மாணவிக்கு பாலியல் தொல்லை 58 வயது ஆசிரியர் தலைமறைவு
மாணவிக்கு பாலியல் தொல்லை 58 வயது ஆசிரியர் தலைமறைவு
மாணவிக்கு பாலியல் தொல்லை 58 வயது ஆசிரியர் தலைமறைவு
ADDED : செப் 19, 2024 02:10 AM
திருநெல்வேலி:6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. சஸ்பெண்ட் ஆன ஆசிரியர் தலைமறைவானார்.
திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை சி.எஸ்.ஐ., புனித பேதுரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக ஹென்றி செல்வன் ராஜ்குமார் 58. பணியாற்றுகிறார். களக்காட்டை சேர்ந்த இவர் ரெட்டியார்பட்டியில் வசிக்கிறார்.
பள்ளியில் புதிதாக 6ம் வகுப்பில் சேர்ந்த 11 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடந்தது ஊர்ஜிதமானதால் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தார். மாணவியின் பெற்றோர் நேற்று அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் தலைமறைவானார்.