/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
/
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
ADDED : நவ 04, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:  திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே கன்னிமார் குளத்தில் நேரடியாக சாக்கடை கழிவுநீரால் நீர் மாசடைந்து வருகிறது.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் இருந்து தெருக்களில் ஓடும் கழிவுநீர் அங்குள்ள கன்னிமார் குளத்தில் நேரடியாக விடப்படுகிறது. 65 ஏக்கரிலுள்ள கன்னிமார்குளம் நீர் நிரம்பி யுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றாமல் உள்ளது. தற்போது கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது.
குளத்தை மாநகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்த வேண்டும். கன்னிமார் குளத்தில் சாக்கடை கலப்பதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

