/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை
/
மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை
ADDED : பிப் 01, 2024 02:01 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக லீலா நவரோஜ் உள்ளார். இங்கு ஆசிரியையாக உள்ள மங்களம் என்பவருக்கும், தலைமை ஆசிரியைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
எனவே தலைமை ஆசிரியைக்கும், அங்கு வந்து செல்லும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, பள்ளியில் பயிலும் மாணவியரை வீடியோவில் பேச சொல்லி, ஆசிரியை மங்களம் வீடியோ எடுத்தார்.
அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மனைவி அனுராதா என்பவர் உதவி புரிந்தார். அந்த வீடியோ வெளியானதால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர்.
இது குறித்து ஒரு மாணவியின் தாய், வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஆசிரியை மங்களம், அனுராதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.