/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பேராசிரியை பாலியல் புகார் 'டுபாக்கூர்' என்கிறது நிர்வாகம்
/
பேராசிரியை பாலியல் புகார் 'டுபாக்கூர்' என்கிறது நிர்வாகம்
பேராசிரியை பாலியல் புகார் 'டுபாக்கூர்' என்கிறது நிர்வாகம்
பேராசிரியை பாலியல் புகார் 'டுபாக்கூர்' என்கிறது நிர்வாகம்
ADDED : ஏப் 11, 2025 01:28 AM
திருநெல்வேலி,:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், இரு பேராசிரியர்கள் மீது உதவி பேராசிரியை அளித்த பாலியல் புகாரில், சமூக நலத்துறையினர் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், வேதியியல் துறை பேராசிரியர் ஒருவரிடம், பிஎச்.டி., பட்டம் பெறுவதற்காக இளம்பெண் பதிவு செய்தார். பின், அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இரு பேராசிரியர்கள் பாலியல் மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக, அவர் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
பல்கலை தரப்பில் கூறியதாவது:
பல்கலையில் எந்த பாலியல் குற்றமும் நடக்கவில்லை. உதவி பேராசிரியை முறையாக வகுப்பு நடத்தவில்லை என, புகாரின்படி நடவடிக்கை எடுத்ததால், அவர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.