/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மர்ம மரணம்
/
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மர்ம மரணம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மர்ம மரணம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மர்ம மரணம்
ADDED : ஆக 31, 2025 07:09 AM

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜன் 42, மர்மமான முறையில் இறந்ததால் குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஊரல்வாய்மொழி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் ராஜன் 42. அணுமின் நிலைய வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் வளாகத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, மனைவி, குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் போராட்டம் நடத்தினர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழிலாளர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி ஒருவரும் மர்மமாக உயிரிழந்திருந்தார்.