/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
குடிநீர் வீணாகும் வீடியோ வெளியிட்டவர் மீது தாக்குதல்; தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

ADDED : அக் 15, 2024 07:15 AM

திருநெல்வேலி : பொது குழாயில் குடிநீர் வீணாவதை வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலரை மன்னிப்பு கேட்க வைத்து கடுமையாகத் தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ளது ஆழ்வாநேரி. அங்கு தெரு குழாயில் குடிநீர் வீணாவது குறித்து அருள் சாலமன் 54, என்பவர் வீடியோ எடுத்து வலைதள குழுவில் பதிவிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற ஆழ்வாநேரி தி.மு.க., பிரமுகர் எட்வர்ட் என்பவர் செப்., மாதம் முதல் வாரத்தில், பாளையங்கோட்டை மருத்துவமனை வந்திருந்த அருள்சாலமனை கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து அதனை வீடியோவாக பதிவிட்டார்.
எட்வர்ட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அருள் சாலமன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஒரு மாதத்திற்கு மேலாகியும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இதனிடையே தாக்குதல் நடத்திய தி.மு.க., பிரமுகர் எட்வர்ட், தாம் தாக்கிய காட்சிகளையும், அருள்சாலமன் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் வலை தளத்தில் பதிவிட்டார்.
இதனை பார்த்த போலீஸ் துணை கமிஷனர் அனிதா, எட்வர்ட் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேட்டு போலீசாருக்கு டோஸ் விட்டார். இதனால் நேற்று எட்வர்ட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.