/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலை விசாரணை குழுவிடம் புகார் தெரிவிக்க வந்தவர் மீது தாக்குதல் முயற்சி
/
மாஞ்சோலை விசாரணை குழுவிடம் புகார் தெரிவிக்க வந்தவர் மீது தாக்குதல் முயற்சி
மாஞ்சோலை விசாரணை குழுவிடம் புகார் தெரிவிக்க வந்தவர் மீது தாக்குதல் முயற்சி
மாஞ்சோலை விசாரணை குழுவிடம் புகார் தெரிவிக்க வந்தவர் மீது தாக்குதல் முயற்சி
ADDED : செப் 22, 2024 02:25 AM
திருநெல்வேலி:மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பிரச்னை குறித்து தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் நேற்று நான்காவது நாளாக திருநெல்வேலியில் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் புகார் அளிக்க வந்த முன்னாள் அரசு ஊழியரை புதிய தமிழகம் கட்சியினர் தாக்க முயற்சித்தனர்.
திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திய பி.பி.டி.சி., நிறுவனத்தின் 99 ஆண்டு ஒப்பந்த காலம் நிறைவடைவதால் தேயிலை தோட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறது.
நான்கு தலைமுறைகளாக அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, டில்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிக்க ஆணையம் ஒரு குழுவை நியமித்தது. தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டி.எஸ்.பி., ரவி சிங், இன்ஸ்பெக்டர் யோகேந்தர் குமார் திரிபாதி ஆகியோர் கடந்த 18ம் தேதி முதல் மாஞ்சோலையில் தொழிலாளர்கள், பி.பி.டி.சி., நிர்வாகம், வனத்துறையினர், அரசுத்துறை அதிகாரிகள் என பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு துறை அதிகாரியிடம் விசாரணை மேற்கொண்டனர். இரவில் வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விசாரணை குழுவை சந்தித்து தனது ஆவணங்களை அளித்தார்.
அப்போது மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக புகார் அளிக்க வந்த முன்னாள் அரசு ஊழியர் தயாளன் என்பவர் கிருஷ்ணசாமி குறித்து அவதுாறாக பேசியதாக கூறி புதிய தமிழகம் கட்சியினர் அவரை ஓட ஓட தாக்க முயற்சித்தனர். தயாளனை பாதுகாப்பாக தங்கள் வாகனத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர். மனித உரிமை ஆணைய குழுவினர் இன்று டில்லி திரும்புகின்றனர்.