/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மழையால் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு
/
மழையால் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு
ADDED : டிச 03, 2025 09:54 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையினால் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் வாழை இலை விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத் திரம், வீரவநல்லூர் மற்றும் தாமிரபரணி கரையோரங்களிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததோடு சூறாவளி வீசியதால் கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வாழைகளில் இருந்து இலைகளை கொண்டு வர முடியவில்லை.
இதனால் நேற்று திருநெல்வேலி டவுன் மார்க்கெட்டில் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு 4500 ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக 200 இலை கொண்ட கட்டு ரூ.500க்கு விற்பனையாகும். தற்போது ரூ.4500 என்பது 10 மடங்கு உயர்வாகும்.

