ADDED : ஆக 28, 2025 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரகப்பகுதியில், கீழஆம்பூரில் துரை ரவிக்குமரன் விவசாய தோட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று இறந்து கிடந்தது.
வேறு விலங்குகளுடன் மோதலில் இக்கரடி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் உடற்கூராய்வு நடத்தினர். மரணக்காரணம் இனச்சேர்க்கையால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிந்தது.