தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கூண்டில் சிக்கியது கரடி

 கூண்டில் சிக்கியது கரடி

 கூண்டில் சிக்கியது கரடி


ADDED : ஜூலை 12, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி-: களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பாபநாசம் வனச்சரகத்தின் கோரையார்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை தந்து வந்த கரடியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்தனர்.

நேற்று அதிகாலை 1:30 மணியளவில் 3 வயது கரடி கூண்டில் சிக்கியது. வன கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்த பின்னர், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநர் மேற்பார்வையில் வனத்துறையினர் கரடியை பாதுகாப்பாக மீட்டு, முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட கொடமாடி அடர்வனப் பகுதியில் இயற்கை வாழ்விடத்தில் விடுவித்தனர்.

சமீபத்தில் சிக்கிய மூன்றாவது கரடியாகும் இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us