தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பிளம்பர் வெட்டிக்கொலை

 பிளம்பர் வெட்டிக்கொலை

 பிளம்பர் வெட்டிக்கொலை


ADDED : ஜூலை 12, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் 38. பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை சங்கரன்கோவில்-டவுன் சாலையில் உள்ள கோட்டையடி உய்காட்டு சுடலைமாடன் கோயில் அருகே நடந்து சென்றபோது, மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ஆவுடையப்பன் உயிரிழந்தார்.

இந்த கொலை முன்விரோதத்தில் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டர் ரஞ்சன் 35,என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us