/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
குடியிருப்பில் சுற்றிய கரடி சிக்கியது
/
குடியிருப்பில் சுற்றிய கரடி சிக்கியது
ADDED : மே 21, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே குடியிருப்புகளுக்கு அருகே வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை களக்காடு -முண்டந்துறை பகுதிகளில் உலவும் கரடிகள் அவ்வப்போது மலை அடிவார வசிப்பிடங்களுக்கும் வருகின்றன. வனப்பகுதியையொட்டி உள்ள கோயில்களுக்கு வந்து செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தெரிந்தது. அம்பாசமுத்திரம் அண்ணா நகர் பகுதிக்கு வந்த கரடியை பிடிக்க வனத்துறையினர், கூண்டு வைத்தனர். கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் பாபநாசம் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.