/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேவர் நினைவு மண்டபம் மீது குண்டு வீச்சு ; மக்கள் மறியல்
/
தேவர் நினைவு மண்டபம் மீது குண்டு வீச்சு ; மக்கள் மறியல்
தேவர் நினைவு மண்டபம் மீது குண்டு வீச்சு ; மக்கள் மறியல்
தேவர் நினைவு மண்டபம் மீது குண்டு வீச்சு ; மக்கள் மறியல்
ADDED : மார் 02, 2026 04:41 AM

திருநெல்வேலி: முத்துராமலிங்கத் தேவர் நினைவு மண்டபம் மீது, மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, திம்மராஜபுரத்தில், முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துடன் கூடிய சிறிய நினைவு மண்டபம் உள்ளது. நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள், மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டு தப்பினர்.
இதில், கண்ணாடி உடைந்து, மண்டபத்தின் உள்பகுதி தீயில் கருகியது. நேற்று காலை, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அரசு பஸ்சை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு, ' தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீரழிந்திருப்பது வெட்கக்கேடானது. அரசு உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்,' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

