/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : டிச 05, 2025 07:06 AM

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலையடுத்து போலீசார் 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுமின்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் நான்கு அணு மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இங்கு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக நேற்று காலை 11:00 மணிக்கு சென்னையில் உள்ள போலீஸ் தலைமையகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது.
அங்கிருந்து அதிகாரிகள் உத்தரவில் கூடங்குளம் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அணுமின் நிலைய வளாகத்தில் காலை 11:30 மணிக்கு துவங்கி 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். வழக்கம்போல அது மிரட்டல் மட்டுமே என தெரிய வந்தது.
கடந்த மாதமும் இதேபோல இங்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.